தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 144

ஒருவர் :உங்க மகனைக் கண்டிச்சு வைங்க...

மற்றவர்:என்ன செஞ்சான் ?
ஒருவர் :ஒட்டுண்ணி, சாருண்ணி பற்றி எழுதச் சொன்னா திவ்யா உண்ணியைப் பற்றி எழுதறான்

சிரிப்பு - 143

திருடன்:டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை

போலீஸ்:டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை

சிரிப்பு - 142

ஒருவர் :திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

மற்றவர்:சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா

சிரிப்பு - 141

திருடன் 1: நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ?

திருடன் 2: எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..

சிரிப்பு - 140

ஒருவர் :வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. .

மற்றவர்:அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை

சிரிப்பு - 139

ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?
மற்றவர்:என்னவாம் ?
ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்

சிரிப்பு - 138

ஒருவர் :பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ?

மற்றவர்:உள்ளே டிபன் வாசமே வரலியே

சிரிப்பு - 137

ஒருவர் :கதாசிரியரை உயில் எழுதச் சொன்னது தப்பாயிடுச்சா ?

மற்றவர்:மேற்கண்ட பெயர்கள் யாவும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல-னு கடைசியிலே எழுதி முடிச்சிட்டாரு

சிரிப்பு - 136

மனைவி:என்னங்க.. . ஆபீஸ் லேர்ந்து தினமும் கலகலப்பா வர்ற நீங்க இன்னைக்கு ரொம்ப வாட்டமா வர்றீங்களே, சம்திங் நிறைய வரலையா...?
கணவன்:சம்திங் வாங்கி மாட்டிக்கிட்டேன் சரசு.. .

சிரிப்பு - 135

ஒருவர் :உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ?

மற்றவர்:அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான்

சிரிப்பு - 134

தயாரிப்பாளர்:உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்...
நடிகர்:கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்தக்கு நான் கால்ஷீட் தர்றேன்

சிரிப்பு - 133

ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.
மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?
ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்.

சிரிப்பு - 132

டாக்டர்:தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு மருந்து, கொடுத்தேன். இப்ப தேவலையா...?
நோயாளி:தேவலை டாக்டர் முன்பெல்லாம் வேகவேகமா நடந்து கிட்டிருந்த நான் இப்ப மெள்ளமா நடக்கிறேன்..

சிரிப்பு - 131

ஒருவர் :ஏம்ப்பா இப்படி பிக்பாக்கெட் தொழில் பண்ணறே ? ஏதாவது ஒரு லட்சியத்தை வெச்சுக்கிட்டு உழைக்க வேண்டியதுதானே ?
மற்றவர்:என்னங்கையா இப்படிக் கேட்கறீங்க ? ஒரு நாளைக்குக் குறைஞ்சது அஞ்சு பர்சையாவது அடிக்கணும்ங்கறதுதானே என்னோட லட்சியமே

சிரிப்பு - 130

ஒருவர் :அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மற்றவர்:மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.

சிரிப்பு - 129

ஒருவர் :உங்க அப்பா ரொம்பவும் பணக்காரராக இருக்கலாம்... அதுக்காக கடிதம் கூட இப்படியா எழுதறது ?
மற்றவர்:அப்படி என்ன எழுதியிருக்கிறார் ?
ஒருவர் :பணம்... பணமறிய ஆவல்-னு எழுதியிருக்கிறார்

சிரிப்பு - 128

ஒருவர் :நீயும் உன் மாமியாரும் வாரா வாரம் - அதுவும் வியாழக்கிழமை மட்டும் சண்டை போடுறீங்களே ஏன் ?
மற்றவர்:அதிரடி வியாழன் என்பதால்தான்

சிரிப்பு - 127

ஒருவர் :என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவா

மற்றவர்:இப்ப எங்க இருக்காங்க ?

ஒருவர் :குளிச்சுகிட்டு இருக்கா

மற்றவர்:கூப்பிடுங்களேன் பார்ப்போம்

சிரிப்பு - 126

பெண்1: நான் போனவாரம் மெகா சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது
பெண்2: ஐயோ ! அப்புறம் ?
பெண்1: அநியாயமா அந்த ஒரு நாள் என்னால சீரியல் பார்க்க முடியாமப் போச்சு

சிரிப்பு - 125

ஒருவர் :டி.வி. ஸ்டேஷனுக்கு ஏன் அருவாளோடு போறீங்க ?

மற்றவர்: புதுசா ஆரம்பிச்சிருக்கிற கேடி-ஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துக்கத்தான்
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!