தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 124

கண்டக்டர்: யோவ்... பஸ்சுக்குள்ளே சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு போட்ருக்குல்ல...

மற்றவர் : கண்டக்டர், நல்லா பாருங்க... இது பீடி

சிரிப்பு - 123

ஒருவர் :டாக்டர் தொழிலும் இப்ப வியாபாரமா போச்சு...
மற்றவர் :எப்படி சொல்றீங்க ?
ஒருவர் : பாருங்க... அந்த டாக்டர் புது வருஷம் ஜனவரி ஒண்ணாம் தேதி அன்னிக்கு ஜுரத்தோட வர்றவங்களுக்கு ஒரு தர்மாமீட்டர் ப்ரீயா கொடுக்கறராம்...

சிரிப்பு - 122

ஒருவர் :நம்ம தலைவர் அரசியலை விட்டதும் காலண்டர் பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காரு, தெரியுமா...?
மற்றவர் :ஹும்... சுருட்டற தொழிலை விடவே மாட்டார் போலிருக்கு

சிரிப்பு - 121

ஒருவர் :ஹேப்பி நியூ இயர்... புது வருஷத்தன்னிக்கு என் படம் ரிலீஸ் ஆகுது
மற்றவர் :ரெண்டுல ஏதாவது ஒண்ணு சொல்லுங்க சார்... அப்படி ரெண்டும் சேர்த்துச் சொல்லணும்னா, வெறும் நியூ இயர்-னு சொல்லுங்க

சிரிப்பு - 120

நோயாளி :உடம்பெல்லாம் கன்னாபின்னானு வேர்க்குது டாக்டர்
டாக்டர் : கவலைப்படாதீங்க... செக் பண்ணிடலாம்...
நோயாளி :நான் ட்ரீட்மெண்ட்டுக்கு வரலை டாக்டர்... உங்க ஏ.ஸி. ரூம்ல
கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்

சிரிப்பு - 119

ஒருவர்: அந்த டாக்டர் பேஷண்ட்டுகிட்டே நைஸா பேசி, ஐஸ் வெச்சு ஆபரேஷனுக்கு முன்னாடி பீஸை வாங்கிடுவாரு
மற்றவர்: ஏன் அப்படி..?
ஒருவர் : ஆபரேஷனுக்கு அப்புறம்னா, அவரால ஐஸ் மட்டும்தான் வைக்க முடியும்... பீஸை வாங்க முடியாதே

சிரிப்பு - 118

நோயாளி : டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?

டாக்டர் : தைலம் அப்ளை பண்ணுங்க...

நோயாளி : அப்படியும் வலி போகலேன்னா...?

டாக்டர் : லீவுக்கு அப்ளை பண்ணுங்க

சிரிப்பு - 117

ஒருவர் :நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர் தான் காரணம்
மற்றவர் : ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?
ஒருவர் : நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு

சிரிப்பு - 116

நர்ஸ் : சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம்.

நோயாளி : டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?

நர்ஸ் : டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்

சிரிப்பு - 115

டாக்டர் :என்னது... கையில சாத்துக்குடியைச் சொருகிக்கிட்டிருக்கீங்க...?

நோயாளி :நகச்சுத்தி பரவி, கைசுத்தி ஆயிடுச்சு டாக்டர்

சிரிப்பு - 114

ஒருவர் :இந்தப் புது வருஷம் 2007-லேர்ந்து மனைவி கிட்டே பயப்படக்கூடாதுனு சபதம் எடுத்திருக்கேன்...
மற்றவர்:இந்த விஷயம் உங்க மனைவிக்குத் தெரியுமா...?
ஒருவர் :சொல்ல பயமா இருக்கு. தெரிஞ்சா திட்டுவா

சிரிப்பு - 113

ஒருவர்:என் பையன் இந்திய கிரிக்கெட் டீம்ல செலக்ட் ஆகியிருக்கான்...

மற்றவர்:முன்ஜாமீனெல்லாம் எடுத்துட்டீங்களா...?

சிரிப்பு - 112

ஒருவர்:மக்களுக்குச் செய்த சேவைக்காக உள்ளே வந்தியா... அப்படி என்ன செய்தே ?
மற்றவர்: எல்லாரும் கஷ்டப்படறாங்களேன்னு புது அஞ்சு ரூபா நோட்டு அடிச்சேன்

சிரிப்பு - 111

ஒருவர் :புது வருஷ தள்ளுபடி விற்பனைல உங்க மனைவிக்கு ஏதாவது வாங்கி கொடுத்தீங்களா...?
மற்றவர்:மிக்ஸி வாங்கினேன்...
ஒருவர்:உங்களுக்கு சரி உங்க மனைவிக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கலையா.. ?

சிரிப்பு - 110

கடவுள் : பக்தா... உனக்கு என்ன வரம் வேண்டும்...?

பக்தன்:நான் இந்த மெகா சீரியல் முடியும் வரை உயிரோடு இருக்கணும்...
சாகா வரமெல்லாம் என்னால் கொடுக்க முடியாது

சிரிப்பு - 109

ஒருவர்:எங்க கடைல வாங்கற டி.வி-க்கு இந்த மெகா சீரியல் முடியற வரைக்கும் கியாரண்டி உண்டு...

மற்றவர்:அப்படியா... வெரிகுட்... பத்து வருஷத்துக்கு மேலே யாரும் கொடுத்ததே இல்லையே

சிரிப்பு - 108

போலீஸ்:டேய் கபாலி! திருடின நகைகளை எங்கே வெச்சிருக்கேன்னு சொல்லிடு
திருடன்: யாரும் எடுக்காம இருக்கணும்னு தபால் பெட்டி-யில போட்டு வெச்சிருக்கேன் சார்

சிரிப்பு - 107

ஒருவர்:இந்த சரித்திர மெகா தொடர்ல 20 எபிசோடா போர் நடக்கறதையே காட்டி வெறுப்பேத்தறாங்க...
மற்றவர்: ரொம்பத்தான் போர்-னு சொல்லுங்க

சிரிப்பு - 106

நடிகர்:உங்க மெகா சீரியலில் அப்பா வேஷம் இருந்தா கொடுங்க..
டைரக்டர்:இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்திருக்கிறேனே ?
நடிகர்:இதே சீரியல்ல சில வருஷங்களுக்கு முன்னாடி ஹீரோவா சான்ஸ் கேட்டு வந்தேனே.. .

சிரிப்பு - 105

ஒருவர்:மெகா சீரியல் டைரக்டரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு.. .

மற்றவர் : ஏன் ?

ஒருவர்:எங்கே போனாலும் என்னையும் இழுத்துக்கிட்டே போறாரு.. .

சிரிப்பு - 104

தொண்டர் 1:தலைவர் ஏன் தினமும் மெகா சீரியல் பாக்கறாரு ?

தொண்டர்2:தன்மேல உள்ள வழக்குகளை எப்படி இழுக்கறதுன்னு கத்துக்கறாரு.

சிரிப்பு - 103

ஒருவர்:எதுக்கு உங்க மனைவி உங்களை முறைச்சிட்டுப் போறாங்க ?

மற்றவர்:புதுசா வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரிக்கும் உனக்கும் இடையில ஆறு வித்தியாசமிருக்குன்னு சொன்னேன்... அதான்

சிரிப்பு -102

ஒருவர்:பாடகர் முன்னாலே ஒருத்தர் டபரா செட்-டைக் காட்டுறாரே... ஏன் ?

மற்றவர்:காபி ராகத்துலே பாட்டு வேணுமாம்

சிரிப்பு - 101

தலைவர்:ஏன்யா... எனக்கு மேடையில நாற்காலி போடலே.. ?

தொண்டர்: நீங்கதானே தலைவரே எனக்கு நாற்காலி ஆசை இல்லைன்னீங்க..

சிரிப்பு - 100

ஒருவர் :கண்டக்டர் ஏன் விசிலுக்கு பதிலா சங்கை ஊதறார் ?
மற்றவர் : டிரைவர் புதுசாம். டிரைவிங் அரைகுறையாத்தான் தெரியுமாம்

சிரிப்பு - 99

தொண்டர் 1 :நம்ம தலைவரை ஏன் கைது பண்றாங்க ?

தொண்டர் 2:குளிர்கால கூட்டத்தொடருக்கு வந்த உறுப்பினர்கள் எல்லாருக்கும் கம்பளி ஆடை வழங்கிய செலவு 10 லட்சம் என்று பொய்க் கணக்கு எழுதியிருக்காராம் அதான்.

சிரிப்பு - 98

ஒருவர் : உங்க பொண்ணுக்கு பூப்பூ நீராட்டு விழான்னு தபால் போட்டுருந்தீங்கள்ல... தபால் ஸ்டிரைக்னால லேட்டாதான் கிடைச்சுது.

மற்றவர் : அதனாலென்ன ? நாளைக்கு அவளுக்குக் கல்யாணம்... இருந்து வாழ்த்திட்டுப் போங்க

சிரிப்பு - 97

நோயாளி : எதுக்கு டாக்டர் மூச்சை இழுத்துவிட சொல்றீங்க ?
டாக்டர் : ஆபரேஷனுக்குப் பிறகு மூச்சுவிட முடியாது. அதான் இப்பவே ஆசைதீர இழுத்து விட்டுக்கங்க

சிரிப்பு - 96

நர்ஸ் : சீரியஸ் ஆபரேஷன்ல செத்துப் பிழைச்சிருக்கே... ஆபரேஷன் பண்ணின டாக்டரே இன்று போல் என்றும் வாழ்க-ன்னு வாழ்த்தினதும் எப்படியிருந்தது உனக்கு.. ?
நோயாளி : எமனே நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணின மாதிரி இருந்தது நர்ஸ்

சிரிப்பு - 95

டாக்டர் : மனைவிக்கு ஆபரேஷன் நடந்தப்போ அழுதுட்டிருந்தாரேன்னு ஆபரேஷன் சக்ஸாஸ்ன்னு பொய்ச் சொன்னேன்.
மற்றவர் : சந்தோஷமாயிட்டாரா ?
டாக்டர் : ஊஹும், இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சுட்டார்.

சிரிப்பு - 94

மனைவி: பால் எல்லாத்தையும் பூனை குடிக்கிற வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க...

கணவன் : இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்துக்கிட்டு இருந்துட்டேன்.

சிரிப்பு - 93

காதலி : ஒருவேளை உங்களுக்கு முந்தி எனக்கு மேரேஜ் ஆயிட்டா நீங்க என் மேரேஜுக்கு வருவீங்களா ரமேஷ் ?

காதலர் : கண்டிப்பா என் மனைவியையும் அழைச்சிட்டு வருவேன் டார்லிங்

சிரிப்பு - 92

ஒருவர் : இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...

மற்றவர் : அவ்வளவு கஷ்டமான கதையா ?

ஒருவர் : ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ப்ரெண்டோட போனேன்...
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!