தமிழ் சிறுவன்

தமிழ் ஜோக்ஸ் படித்து மகிழுங்கள்

சிரிப்பு - 91

தொண்டர் 1 : நம்ம தலைவரோட செல் நம்பர் 286.

தொண்டர் 2 : என்னது... மூணே நம்பர்தானா... ?

தொண்டர் 1 : நான் சொன்னது... ஜெயில்ல அவரோட செல் நம்பரை

சிரிப்பு - 90

ஒருவர் : கவனிச்சீங்களா... ஏதோ வதந்தியை நம்பி நிறைய பெண்கள் தாலி மாத்திக்கிட்டாங்க...
மற்றவர் : நீங்க வேற... சில பெண்கள் கணவனையே மாத்திட்டாங்களாம்

சிரிப்பு - 89

ஒருவர் : பார்த்தீங்களா இந்த அநியாயத்தை... நான் செத்ததா ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டுட்டாங்க...
மற்றவர் : அடப்பாவிங்களா... அப்ப நீங்க இன்னும் சாகலையா.. ?

சிரிப்பு - 88

ஒருவர் : ஊரே இந்த வதந்தியை நம்பிக்கிட்டிருக்கு... எப்படி நீங்க மட்டும் நம்பாம கூலா இருக்கீங்க...?

மற்றவர் : கிளப்பிவிட்டதே நான்தானே

சிரிப்பு - 87

நோயாளி : ஒரு குடும்பத்தையே காப்பாத்த வேண்டிய நிலைமையில நான் இருக்கேன். எனக்கு அவசியம் ஆபரேஷன் பண்ணியாகணுமா டாக்டர்... ?
டாக்டர் : வேற வழியே இல்லை... நானும் உங்க நிலைமையிலதான் இருக்கேன்

சிரிப்பு - 86

ஒருவர் : எங்க டாக்டர்கிட்ட எப்பவும் பேஷண்ட்ஸ் கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும்

மற்றவர் : இருக்கலாம்... அதுக்காக இப்படி அரை நாளுக்கு மட்டும் பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்துட்டு, திரும்பவும் சாயந்திரம் வரச்சொன்னா எப்படி ?

சிரிப்பு - 85

கணவன் : நம்ம டாக்டர் என் கனவுல ரெண்டு நாளா தொடர்ந்து வரார்
மனைவி : அவர்கிட்டே இதை உளறி வெக்காதீங்க... ரெண்டு விசிட்டிங் பீஸ் கேட்டுருவார்

சிரிப்பு - 84

நர்ஸ் : டாக்டர்... நாலாம் நம்பர் பேஷண்ட் ஆபரேஷனுக்கு முன்னாடியே மொத்தப் பணத்தையும் கொடுத்துட்டாரு.. .
டாக்டர் : பாவம்... பிழைக்கத் தெரியாத ஆளா இருக்காரே

சிரிப்பு - 83

திருடன் 1 : அரசியல் தலைவர் வீட்டுக்கு ஏன் திருடப் போனாய் ?
திருடன் 2 : எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு நடத்த கதவு திறந்தே இருக்கும் என்று அறிக்கை விட்டிருந்தாரே

சிரிப்பு - 82

தொண்டர் 1 :தன்னோட கால்ல யாரும் இனிமே விழ வேண்டாம்னு தலைவர் சொல்லிட்டாராமே, ஏன் ?

தொண்டர் 2 : போன தடவை யாரோ அவரோட வேட்டில மூக்கைத் துடைச்சி அசிங்கம் பண்ணிட்டாங்களாம்...

சிரிப்பு - 81

ஒருவர் :அந்த டாக்டர் ஒரு அரசியல் வாதின்னு எப்படிச் சொல்றீங்க ?

மற்றவர் : ஓட்டு எண்ணிக்கை குறைஞ்சுடும்னு தேர்தல் முடியும் வரை எந்த ஆபரேஷனும் செய்ய மாட்டேன்னு சொல்கிறாரே

சிரிப்பு - 80

தொண்டர் 1 : தலைவர் உடம்பு வீங்கியிருக்கே... ஏன் ?

தொண்டர் 2 : எப்போதும் செய்திகள்லே அடிபட்டுக்கிட்டே இருக்காரே

சிரிப்பு - 79

ஒருவர் : குருப் பெயர்ச்சியால் எனக்கு ஒரு நன்மை ஏற்பட்டது.
நண்பர் : என்ன நன்மை ?
ஒருவர் : எங்க தூங்குமூஞ்சி வாத்தியார் மாறுதலாகிப் போயிட்டார்

சிரிப்பு - 78

ஒருவர் :அந்த ராமசாமி, தன்னோட பிசினஸ் பற்றிப் பேச ஆரம்பிச்சா லட்சம், கோடின்னுதான் பேசுவார்...

மற்றவர் : ஓ... அப்படியா. என்ன பிசினஸ் பண்றார் ?

ஒருவர் : நீ வேற பிளாட்பாரத்தில் லாட்டரிச் சீட்டு விற்கிறார்

சிரிப்பு - 77

ஆசிரியர் :ஷஜகான் - மும்தாஜ் பற்றி ஒரிரு வரிகள் சொல்.

மாணவன் : ஷஜகான் பற்றி சரியா தெரியலை சார். ஆனா மும்தாஜ் நிறைய படத்துல புக் ஆகிட்டு வர்றாங்க

சிரிப்பு - 76

பெண் : டாக்டர், எங்க வீட்டுக்காரர் ராத்திரிக்கு தூங்கவே மாட்டேங்கிறார்.

டாக்டர்: எவ்வளவு நாளா அப்படி யிருக்கு ?

பெண் : என் தங்கச்சி ஊர்ல இருந்து வந்ததுலயிருந்து.

சிரிப்பு - 75

பெண் 1 : டாக்டர் என் கணவர்கிட்டே சாப்பாட்டுல காரமே சேர்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு
பெண் 2 : ஏன்... அவருக்கு அல்சரா...?
பெண் 1 : இல்லை... எனக்கு..

சிரிப்பு - 74

சிறுவன் 1: எங்க தாத்தாவுக்கு இன்னியோட நூறு வயசு... இதுவரைக்கும் ஒரு தடவைகூட டாக்டர்கிட்ட போனதே கிடையாது
சிறுவன் 2 : அவருக்கு நூறு வயசுன்னு சொல்லும்போதே நெனைச்சேன்...

சிரிப்பு - 73

ஒருவர் :நான் பைனான்ஸ் கம்பெனி நடத்தறேன்.. என் வொய்ப் டான்ஸ் ஸ்கூல் நடத்தறா
மற்றவர் : ஓடி ஆடி சம்பாதிக்கிற குடும்பம்னு சொல்லுங்க

சிரிப்பு - 72

போலீஸ் : உங்க வீட்டுல திருடினவனைப் பத்து வருஷமா தேடியும் கண்டுபிடிக்க முடியலை

மற்றவர் : அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றீங்க சார் ?

போலீஸ் : அவன் கொடுக்க வேண்டிய பாக்கி மாமூலை நீங்களே கொடுத்துட்டீங்கன்னா, பைலை க்ளோஸ் பண்ணிடுவேன்

சிரிப்பு -71

ஒருவர் :உங்க ஆபீஸ்லே அவனுக்கு செல்வாக்கு ஜாஸ்தியா, எப்படி ?

மற்றவர் :மானேஜர் ரூமில் போய்தான் துhங்குவான்னா பாரேன்...
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக!